பெருங்குடலில் புற்றுநோயை உருவாக்கும் உணவுகள் !

பெருங்குடலில் புற்றுநோயை உருவாக்கும் உணவுகள் !

இப்போதெல்லாம் வர கூடிய நோய்களுக்கு பேர் வைக்கவே ஒரு தனி குழு அமைக்க வேண்டிய அளவிற்கு நோய்களின் எண்ணிக்கையும், அதன் வீரியமும் அதிகமாகி உள்ளது. 
புற்றுநோயை உருவாக்கும் உணவுகள்

குறிப்பாக புற்றுநோய் போன்றவை பலவிதங்களில் நமது உடலில் உருவாக தொடங்கியுள்ளது. ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு வேறு விதமாகவும் இந்த புற்றுநோய் செல்கள் உடலில் உரு பெறுகின்றன.

இது என்ன அவ்ளோ மோசமான நோயா..? அப்படினு கேக்குறவங்களுக்கு இதனால் ஆண்டுக்கு எத்தனை பேர் உயிரிழக்கின்றனர் என்பதை அறிந்தால் புரியும். 
ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 9 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர் என ஆய்வுகள் சொல்கின்றன. அதில் குறிப்பாக பெருங்குடல் புற்றுநோயால் 830,000 மக்கள் உயிரை பறிகொடுத்து விடுகின்றனர். 

இவற்றிற்கெல்லாம் காரணம் நீங்கள் சாப்பிட கூடிய சில மோசமான உணவுகள் தான். எப்படிப்பட்ட உணவுகள் பெருங்குடல் புற்றுநோயை தரும் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

தெரியாத புற்றுநோய்..!
தெரியாத புற்றுநோய்
பலருக்கு இந்த வகை பெருங்குடல் புற்றுநோய் உள்ளது என்பது கூட தெரிவது இல்லை. இவற்றின் அறிகுறிகள் வெளிப்பட்டால் கூட சாதாரண காய்ச்சலை போல எடுத்து கொல்பவர்களும் இங்கு உண்டு. 

சில சமயங்களின் இந்த வகை புற்றுநோயின் அறிகுறிகள் ஆரம்ப நிலையில் வெளிப்படாமலும் இருப்பதுண்டு.

அறிகுறிகள் என்னென்ன..?
அறிகுறிகள் என்னென்ன
உங்களுக்கு பெருங்குடல் புற்றநோய் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை தான்...

- மலம் கழிக்கும் போது ரத்தம் வருத்தம்.

- தொடர்ந்து 4 வாரங்களாக மலச்சிக்கல் அல்லது வயிற்று போக்கு போன்றவை ஏற்படுதல்

- வயிற்றில் வலி, வாயு தொல்லை, அடிக்கடி சோர்வு, பசியின்மை உண்டாகுதல்

- காரணமில்லாமல் உடல் எடை கூடுதல்

அடைபட்ட உணவுகள்
அடைபட்ட உணவுகள்

பொதுவாகவே டின் அல்லது கேன்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மிக மோசமான அளவில் உங்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும். காரணம், இந்த் டின்களில் உள்ள bisphenol-A (BPA) என்கிற வேதி பொருள் தான்.
இவை நமது மரபணுவையே மாற்ற கூடிய அளவிற்கு வீரியம் கொண்டவை. இப்படிப்பட்ட உணவுகள் தான் நமக்கு பெருங்குடல் புற்றுநோயை உருவாக்குகிறது.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
இன்று நாம் சாப்பிட கூடிய பல உணவுகள் சுத்தம் செய்யப்படும் பெயரில் அதன் தன்மையை மாற்றி விடுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த அத்தியாவசிய உணவு பொருட்களில் பல இப்படி தான் உள்ளது. 

இது போன்ற சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை சாப்பிட்டால் பெருங்குடல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் செல்கள் தங்கி இருக்கும் கூடாரமாக மாறி விடும்.

அதிக உப்பும், ஊறுகாயும்..!
அதிக உப்பும், ஊறுகாயும்
நாம் இன்று சாப்பிட கூடிய ஊறுகாய் போன்ற உணவு பொருட்களில், பதப்படுத்துவதற்காக (preservatives) நைட்ரேட் போன்றவற்றை சேர்க்கின்றனர். 
இவை அதிக நச்சு தன்மை கொண்டது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இவற்றை சூடு செய்யும் போது நைட்ரிட்டாக (nitrites) மாற்றம் பெற்று விஷ தன்மை அடைக்கிறது.

சுவை என்னும் எமன்..!
சுவை என்னும் எமன்

ஆரோக்கியத்திற் காக சாப்பிட்ட காலம் மலையேறி, சுவைக்காக மட்டுமே சாப்பிட கூடிய காலம் வந்து விட்டது. 

அந்த வகையில், சுவையூட்டிகள் அதிகம் கொண்ட சோடா, கார்போனேட்டட் குளிர்பானங்கள் நமது உடலை முழுமையாக நாசம் செய்கிறது. 

இவற்றில் கலக்கக்கூடிய வேதி பொருட்கள் தான் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோயை தரும்.

மரபணு மாற்றமா..!
மரபணு மாற்றமா
இன்று நாம் உண்ணும் உணவில் பலவகை உணவுகளும் மரபணு மாற்றம் பெற்றவையாகவே உள்ளது. சாப்பிட கூடிய சிறிய பட்டாணி முதல் பெரிய பழங்கள் வரை, எல்லாவற்றிலும் மரபணு மாற்றம் பெற்று விட்டது. 
இவற்றை செரிக்க கூடிய குடலானது இதனால் தான் புற்றுநோயை உண்டாக்குகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
சமீபத்தில் இறைச்சி பற்றிய பலவித செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். ஹோட்டல்களில் இறைச்சி என்கிற பெயரில் கண்டதையும் விற்கவும், பதப்படுத்தி பயன்படுத்துவதும் பல இடங்களில் நடக்கிறது. 

நாம் இவற்றை கொஞ்சமும் கவனிக்காமல் சாப்பிட்டு விடுகின்றோம். பிறகு கிடைப்பது புற்றுநோயாக தான் இருக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்

சமையலுக்கு தேவைப்படும் எண்ணெய்கள் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்டே கடைகளில் விற்கப்படுகிறது. 

சுத்திகரிப்பதற்காக இவற்றில் சேர்க்கப்படுகின்ற வேதி பொருட்கள் தான் நமக்கு பெருங்குடல் புற்றுநோயை உண்டாக்குகிறது என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்..!
மைக்ரோவேவ் பாப்கார்ன்
படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும் பலருக்கு பிடித்தமான ஒன்று இந்த பாப்கார்ன் தான். 
ஆனால், இதிலும் புற்றுநோய் உண்டாக்க கூடிய காரணிகள் உள்ளது என மருத்துவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக மைக்ரோவேவ் பாப்கார்னில் இந்த நோய் அபாயம் உள்ளதாம்.

என்ன செய்யலாம்..?
புற்றுநோய்க்கு என்ன செய்யலாம்
இது போன்று மோசமான புற்றுநோயில் இருந்து நீங்கள் தப்பிக்க மேற்சொன்ன உணவு பொருட்களை கட்டாயம் தவிர்த்து விடுங்கள். 

இல்லையேல் பெருங்குடல் புற்றுநோயுடன் வேறு சில புற்றுநோய்களும் வரிசையாக வர தொடங்கும்.

இவற்றை சாப்பிடுங்கள்...
புற்றுநோய்க்கு இவற்றை சாப்பிடுங்கள்

நார்சத்துகள் கொண்ட பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பெரிஸ் போன்றவை களையும், பைட்டோ கெமிக்கல்ஸ் நிறைந்த பீன்ஸ், கேரட், தக்காளி, ப்ரோக்கோலி, சிட்ரஸ் வகை பழங்கள், மிளகு போன்றவற்றையும்;
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட உணவு களையும் சாப்பிடு வந்தாலே பெருங்குடல் புற்றுநோயில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
Tags: