கடலைப்பருப்பு சுய்யம் செய்வது எப்படி?





கடலைப்பருப்பு சுய்யம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 100 கிராம்

பாகு வெல்லம் - 100 கிராம்

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

முந்திரித்தூள் - 1 ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - 1/4 கிலோ

மாவுக்கு

மைதா மாவு - 75 கிராம்

அரிசி மாவு - 2 ஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு

சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை
கடலைப்பருப்பு சுய்யம் செய்வது
வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். வேக வைத்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் 

ஆகிய வற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.
மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். 

வாணலியில் எண்ணெய் சூடானதும், பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்தெடுக்கவும். கடலைப்பருப்பு சுய்யம் ரெடி.
Tags: