வீட்டிலேயே அனைவரும் முடங்கி உள்ள இந்த நேரத்தில் இது போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டு வீட்டில் உள்ள குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வீட்டுக் குள்ளேயே இருங்கள்.
டயட்டில் இருப் பவர்கள் காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை பிரெட் முட்டை வெஜி டபிள் சாண்ட்விச் செய்து சுவைக்கலாம்.
இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரவுன் பிரெட் - 8
முட்டை - 4
(சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் )
வெங்காயம் - 1 பெரியது
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
குடை மிளகாய் - 1 சிறியது
வெள்ளரி - அரையளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், வெள்ளரிக் காய், குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின் உப்புத்தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும். இடையில் முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும். ( முட்டை வெள்ளைக் கருவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் )
வெங்காயம் வதங்கியதும் முட்டையை ஊற்றி கலந்து கிண்டவும். இறுதியில் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் வெள்ளரி கலந்து இறக்கவும்.
பிரவுன் பிரெட்டை ஓரத்தை வெட்டி விட்டு அதை முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இரண்டு பிரெட் துண்டங்களுக்கு நடுவில் முட்டை கலவையை வைத்து sandwich மேக்கரில் டோஸ்ட் செய்து எடுத்து பரி மாறவும். சத்தான கோதுமை பிரெட் முட்டை வெஜிடபிள் சாண்ட்விச் தயார்.