கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி?





கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி?

கருப்பு உளுந்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த நார்ச்சத்து நாம் சாப்பிடும் எந்த வகையான உணவுகளிலும் இருக்கும் சத்துக்களை சரி செய்து, உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது. 
கருப்பு உளுந்து அடை
கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது.  

நீரிழிவு நோயாளிகள் கருப்பு உளுந்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு ஒழுங்கு படுத்தப்படும். 

மேலும், கருப்பு உளுந்து சருமத்திற்கு நல்லது செய்வதோடு, கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் கறைகளை எதிர்த்து போராட உதவும். அதோடு, கருப்பு உளுந்தம் பருப்பு இதயத்திற்கு மிகவும் நல்லது. 

கருப்பு உளுந்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தில் சரியாக வேலை செய்து செரிமானத்தை அதிகரிக்கிறது. 

மேலும், கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவும் பெரிஸ்டால்சிஸ் வெளியீட்டை தூண்டவும் செய்கிறது. கருப்பு உளுத்தம் பருப்பில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், அவை உடலில் உள்ள ஆற்றலை அதிகரிக்க சிறந்ததாகும். 

நம் உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து எனில் அது இரும்புச் சத்து ஆகும். ஏனெனில், இவை தான் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. 

மேலும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லவும் இரும்புச் சத்து உதவுகிறது. சரி இனி கருப்பு உளுந்து பயன்படுத்தி டேஸ்டியான கருப்பு உளுந்து அடை செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 

தேவையான பொருட்கள் : .

புழுங்கல் அரிசி - 250 கிராம்,

கருப்பு உளுந்து - 100 கிராம்,

துவரம்பருப்பு - 1 கப்,

வெங்காயம் - 3,

காய்ந்த மிளகாய் - 5,

இஞ்சி - சிறு துண்டு,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:

வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, துவரம் பருப்பை நன்றாக கழுவி தனித்தனியாக ஊற வைக்கவும்.

அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து கரகரப்பாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளவும். உளுந்து, துவரம் பருப்பை சேர்த்து அரைத்து, பிறகு எல்லா மாவையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இந்த மாவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு அடை மாவு தயாரிக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு, சிறிது கெட்டியாக மாவை வார்த்து, இருபுறமும் மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுக்கவும். சத்தான கருப்பு உளுந்து அடை ரெடி.
Tags: