பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் செய்வது எப்படி?

பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ் செய்வது எப்படி?

தேவையானவை:
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம் (நீளவாக்கிலோ சதுரவாக்கிலோ நறுக்கவும்)
ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?
அன்னாசிப் பழ கியூப் துண்டுகள் – 10

காய்ந்த மிளகாய் – 4

வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

சிவப்பு குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்த மல்லித்தழை – சிறிதளவு

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைப் பழம் – ஒன்று

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

மிளகு, உப்பு – தேவையான அளவு

ஸ்கீவர்ஸ் - தேவையான அளவு

செய்முறை:
பெரிபெரி சிக்கன் ஸ்கீவர்ஸ்

கிரில் சிக்கன் பொடி செய்வது எப்படி?
எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுக்கவும். கடாயில் வெண்ணெய்யை உருக்கி, வெங்காயம், குடமிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, கொத்த மல்லித்தழை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். 

ஆறிய பின், மிக்ஸியில் தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். பாத்திரத்தில் சிக்கன் துண்டுகள், அரைத்த விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும். 

ஸ்கீவர்ஸில் அன்னாசிப் பழ கியூப், ஊறவைத்த சிக்கன், மீண்டும் அன்னாசிப் பழ கியூப் என மாற்றி மாற்றிக் குத்தி வைக்கவும். 
ஹனி சிக்கன் செய்வது எப்படி?
இதை தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கவும். மயோனைஸுடன் சூடாகப் பரிமாறவும்.
Tags: