புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட் செய்வது !





புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட் செய்வது !

0
உணவின் ஒரு பகுதியாக சிறிய அளவில் பூண்டு சாப்பிடுவது போதாது. ஆனால் சில வகை மருந்துகளை எடுத்துக் கொண்டால் சிறிது பூண்டை குறைப்பது நல்லது. 
புதினா - கார்லிக் பட்டர் டோஸ்ட்
பூண்டை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, ​​அது இரத்தம் உறைதல் மருந்துகளால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கிறது. 

ஆனால் பூண்டு, வெங்காயம் போன்றவை லெளகீக உணர்வுகளை தூண்டக் கூடியன. அதனால் தான் துறவு வாழ்க்கை வாழக் கூடியவர்கள், இறை சிந்தனை மேலோங்க வேண்டும். 
உடலாலும் மனத்தாலும் இறைவனுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்பவர்கள் லெளகீக உணர்வுகளை தூண்டும் வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை உணவில் தவிர்க்க வேண்டும் என சொல்லப் படுகிறது.

தேவையானவை:
பிரெட் துண்டுகள் - 10,

புதினா - ஒரு கைப்பிடி,

உரித்த பூண்டு - 6 பல்,

பச்சை மிளகாய் - 1,

வெண்ணெய் - 100 கிராம்,

உப்பு - சிறிதளவு,

நெய் - 6 டீஸ்பூன்.

செய்முறை:

புதினாவுடன், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதில் வெண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் குழைத்து, பிரெட்டின் இருபுறமும் தடவவும். 
பிரெட்டை தோசைக் கல்லில் போட்டு, நெய் விட்டு மொறு மொறுப்பாக எடுக்கவும். இதற்கு சாஸ் சிறந்த காம்பினேஷன். பூண்டு, புதினா வாசனையுடன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.

வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். 

மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.
புதினாவை துவையல் செய்து சாதத்துடன் சாப்பிட்டு வர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, செரியாமை ஆகியன தீரும். 

புதினா எண்ணெய் 2 மிலி அளவு 1 அல்லது 1 ½ டம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க வயிற்று வலி அஜீரணம் குணமாகும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)