ஃபல்ஹாரி பகோரா ரெசிபி | Falhari Pakore Recipe !





ஃபல்ஹாரி பகோரா ரெசிபி | Falhari Pakore Recipe !

0
மரகோதுமை, சீரகம் மற்றும் அனார்தனா சேர்த்து செய்யப்படும் இந்த மொறு மொறுப்பான சிற்றுண்டியை இந்த நவராத்திரி யில் செய்து அசத்துங்கள்.
ஃபல்ஹாரி பகோரா ரெசிபி

தேவையான பொருட்கள்

3-4 நடுத்தரமாக உருளைக் கிழங்கு

5 மேஜைக் கரண்டி மரகோதுமை

1 பச்சை மிளகாய்,

நறுக்கப்பட்ட 1 தேக்கரண்டி அனார்தனா

1/2 தேக்கரண்டி சீராக தூள்

1 கப் தண்ணீர்

தேவையான அளவு எண்ணெய்

தேவைக்கேற்ப உப்பு

எப்படி செய்வது 

உருளைக் கிழங்கை கழுவி, தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மரகோதுமையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

அத்துடன் பச்சை மிளகாய், சீராக தூள், உப்பு, அனார்தனா மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தை விட சற்று கெட்டியாக கலக்கி கொள்ளவும்.
நாளமில்லாச் சுரப்பிகள் !
அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அதில் பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைக ளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.

மொறுமொறுப்பாக பொன்னிறமாக வெந்ததும் அதிகப் படியான எண்ணெய்யை வடித்தெடுக்கவும்.

இந்த மொறுமொறு ஸ்நாக்ஸை மின்ட் யோகர்டுடன் சேர்த்து சூடாக சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)