ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?





ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் செய்வது எப்படி?

0
முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 
ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட் செய்வது
உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம். 

அதிலும் காலை உணவு ஆரோக்கிய மானதாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்யும் நிலையில், அதற்கு தகுந்த உணவாக முட்டை இருக்கிறது. 

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 
இதனால் பிற உணவுகளின் அளவு குறைகிறது என்ற அளவில் உடல் எடையை குறைக்க இது உதவியாக அமையும். 

புரதச்சத்து மிகுதியாக கொண்ட முட்டை சாப்பிட்டால் நம் தசைகள் வலிமை அடையும் மற்றும் உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட தொடங்கும். 

முட்டையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடல் வலிமை பெற உந்துசக்தியாக அமையும் மற்றும் நமக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.
என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 1 பெரியது

முட்டை – 3

பெரிய வெங்காயம் – 1

உப்பு – தேவைக்கேற்ப

மிளகுத் தூள் – 1 டீ ஸ்பூன்

எண்ணெய் – 2 டீ ஸ்பூன்

எப்படிச் செய்வது?
முதலில் உருளைக் கிழங்கையும், பெரிய வெங்காயத்தையும் தனித் தனியாக பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் அடிப்பாகம் அகன்ற கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும்.

அதில் நறுக்கிய உருளைக் கிழங்கு துண்டுகளை போட்டு கிளறவும். உருளைக் கிழங்கு பாதி வெந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து கிளறவும். அதில் மிளகு தூள் சேர்க்கவும். 
மற்றொரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். உருளைக்கிழங்கு நன்கு பொரிந்ததும் அதில் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி நன்கு பரத்தவும். 
இதை மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும். சிவந்து வெந்தவுடன் திருப்பி போட்டு வேக விடவும். நன்கு சிவந்து வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)