உருளைக்கிழங்கு கோதுமை தோசை செய்வது | Potato wheat Dosa Recipe !





உருளைக்கிழங்கு கோதுமை தோசை செய்வது | Potato wheat Dosa Recipe !

கோதுமை தோசை செய்யும் போது அதனுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு கோதுமை தோசை செய்வது
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 2

வெங்காயம் – 1

கோதுமை மாவு – 1 கைப்பிடி

பச்சை மிளகாய் – 2

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து வெந்ததும் தோலை நீக்கி விட்டு துருவிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக் கிழங்கை போட்டு, அத்துடன் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து,

சிறிது தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்த மல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை தோசை களாக ஊற்றி சுற்றி 

சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், உருளைக் கிழங்கு கோதுமை தோசை ரெடி.
Tags: