சுவையான கோவைக்காய் இட்லி செய்வது எப்படி?





சுவையான கோவைக்காய் இட்லி செய்வது எப்படி?

0
கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 
சுவையான கோவைக்காய் இட்லி செய்வது எப்படி?
நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கோவைக்காய் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. 

பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். 

கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். 

ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ

கோவைக்காய் – கால் கிலோ

இஞ்சி – 50 கிராம்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2 அல்லது

மிளகாய்த் தூள் – தேவையான அளவு

இட்லி மிளகாய் பொடி – தேவையான அளவு

எண்ணெய் – சிறிதளவு
செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி நறுக்கிய கோவைக்காய், வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும்.

தேவையான அளவு மிளகாய்த்தூள் அல்லது பச்சை மிளகாய், சேர்த்து இதை பொரியல் போல செய்து, இட்லித் தட்டில் இட்லி மாவு ஊற்றி, இதன் மேல் இந்தப் பொரியலை வைத்து வேக வைத்தால் கோவைக்காய் இட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)