வெந்தய சீரகம் இட்லி செய்வது எப்படி?





வெந்தய சீரகம் இட்லி செய்வது எப்படி?

0
கட்டி பெருங்காயம், வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்து விடும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டலில் போட்டு வைத்து கொண்டால் பல விதங்களில் நமக்கு பயன்படும்.
வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம்  உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. 

மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ  அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது. 

பொதுவாக நம்முடைய கிச்சனில் இருக்கும் பல மசாலா பொருட்கள் நாம் விரும்பி சாப்பிடும் பல உணவுகளின் சுவையை அதிகரிக்க செய்வதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு அளிக்கின்றன. 

அத்தகைய மசாலா பொருட்களில் ஒன்று தான் மருத்துவ குணங்கள் பல கொண்ட சீரகம். சீரகத்தை முறையாக பயன்படுத்தினால் அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எக்கச்சக்கம். 

பொதுவாக சீரகம் காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் சாம்பார், கூட்டு போன்றவற்றிலும் சட்னி வெரைட்டிகளை தாளிக்கவும் என பல வழிகளில் பயன்படுத்தப் படுகிறது. 

உணவுகளில் சீரகத்தை பயன்படுத்துவதை விட, சூடு நீரில் இதனை சேர்த்து பயன்படுத்துவதால் நன்மைகள் அதிகம்.

தேவையானவை:

இட்லி மாவு – ஒரு கிலோ

வெந்தயம் அல்லது சீரகம் – 50 கிராம்

தேன் அல்லது சாக்லேட் சாஸ் – 100 கிராம்

செய்முறை:

வெந்தயம் அல்லது சீரகத்தைப் பொடியாக அரைத்து இட்லி மாவில் கலந்து கொள்ளவும். மாவை சிறிய இட்லி தட்டில் நெய் / எண்ணெய் தடவி மாவை ஊற்றி, 13 நிமிடம் ஆவியில் வேக விட்டு எடுக்கவும். 

இட்லித் தட்டில் ஊற்றிய பின்பு மேலே தேன் அல்லது சாக்லேட் ஸாஸ் ஏதேனும் ஒன்றை ஊற்றி வேக வைக்கவும். ருசியான வெந்தய சீரகம் இட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)