பச்சை மிளகாய் பச்சடி செய்வது | Green Chilli Pachadi Recipe !

பச்சை மிளகாய் பச்சடி செய்வது | Green Chilli Pachadi Recipe !

0
தேவையானவை:
பாசிப்பருப்பு – அரை கப்,

பச்சை மிளகாய் – 50 கிராம்,

சின்ன வெங்காயம் – 10 அல்லது பெரிய வெங்காயம் – 1,

புளி – நெல்லிக்காய் அளவு,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,

வெந்தயம் – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
பச்சை மிளகாய் பச்சடி செய்வது
பாசிப்பருப்பை நிறம் மாறாமல் வாசனை வரும் வரை வறுத்து, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடுங்கள்.

பச்சை மிளகாயை கால் அங்குல அளவுக்கு வட்டங்களாக நறுக்கிக் கொள்ளுங்கள். 
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்குங்கள் (பெரிய வெங்காயம் என்றால் பொடியாக நறுக்குங்கள்).

எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து பொன்னிற மானதும், வெங்காயம், மிளகாய் சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு, புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி சேருங்கள்.

சிறு தீயில் வைத்து பச்சை வாசனை போகக் கொதிக்க விடுங்கள். பாசிப்பருப்பை சேர்த்து, மேலும் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள். 
பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !
கட்டு சாதத்துக்கும் தயிர் சாதத்துக்கும் டக்கரான ஜோடி இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)