முட்டை புர்ஜி சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டையுடன் பன்னீர் சேர்த்து செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 4

சோம்பு – சிறிதளவு

வெண்ணெய் – சிறிதளவு

பன்னீர் – 200 கிராம்

உப்பு – சுவைக்கு

முட்டை – 3 (வெள்ளைக்கரு மட்டும்)

கரம் மசாலா தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

கொத்த மல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். 

 ஒரு வாணலியில் வெண்ணெய் போட்டு அது உருகிய வுடன் சோம்பு போட்டு தாளித்த பின் அதில் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும். 

இரண்டும் நன்றாக வதங்கிய பின் துருவிய பன்னீர் சேர்க்கவும்.

அடுத்து அதில் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

பூ போல உதிரியாக வந்ததும் அதில் கொத்த மல்லி தழையை தூவி இறக்கவும். சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி ரெடி.