முள்ளங்கி பொரியல் செய்வது | Radish fries Recipe !





முள்ளங்கி பொரியல் செய்வது | Radish fries Recipe !

0
என்னென்ன தேவை?
முள்ளங்கி - 1,

பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1,

பச்சை மிளகாய் - 1,

காய்ந்த மிளகாய் - 1,

பயத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்,

தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

வறுத்த வேர்கடலை உடைத்தது - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
முள்ளங்கி பொரியல் செய்வது
பயத்தம் பருப்பை ஊற வைக்கவும். முள்ளங்கியை சிறு துருவலாக துருவிக் கொண்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து

பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் வதக்கி வெங்காய த்தை போட்டு பொன்னிற மாக வதக்கி ஊறிய பயத்தம் பருப்பு, முள்ளங்கித் துருவலை சேர்த்து வதக்கவும். 

நன்கு வதங்கியதும் தேங்காய்த் துருவல், உப்பு, வேர்க்கடலை போட்டு பிரட்டி பரிமாறவும்.

குறிப்பு:

முள்ளங்கி வடிகட்டிய தண்ணீரில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து சூப்பாக அருந்தலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)