தேவையானவை:
பச்சரிசி - 2 கப்,

புதினா, கொத்த மல்லி - தலா ஒரு சிறிய கட்டு,

தேங்காய்த் துருவல் - கால் கப்,

பச்சை மிளகாய் - 2,

வெங்காயம், தக்காளி - தலா ஒன்று,

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:
மல்லி - புதினா பிரியாணி செய்வது
வெறும் வாணலியில் பச்சரிசியை வறுக்கவும். புதினா, கொத்த மல்லியைச் சுத்தம் செய்து தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். 
குக்கரில் எண்ணெய் விட்டு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி... 

இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கி, 3 கப் நீர் விட்டு அரிசி, உப்பு, அரைத்து வைத்த புதினா - கொத்தமல்லி விழுதை சேர்த்து நன்றாகக் கலக்கி, குக்கரை மூடவும். 
ஒரு விசில் வந்ததும் இறக்கவும். அதிக செலவில்லாத இந்த பிரியாணி, அசத்தலான சுவையில் இருக்கும்.