ஆட்டுக்கால் (கஜடா) கேக் செய்வது எப்படி?





ஆட்டுக்கால் (கஜடா) கேக் செய்வது எப்படி?

0
பொதுவாக நாம் டீ கடைக்கு சென்றால் டீயுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு சுவையான தின்பண்டம் கஜடா. இது மாலை நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.
ஆட்டுக்கால் (கஜடா) கேக் செய்வது எப்படி?
மிகவும் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாக இருக்கும். 

இவற்றை நாம் வீட்டிலேயே எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்:-

சர்க்கரை – 1/2 கப்

ஏலக்காய் – 3

முட்டை – 1

மைதா மாவு – ஒரு கப் (250 கிராம்)

ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்

பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை

உப்பு – ஒரு சிட்டிகை

நெய் – ஒரு டீ ஸ்பூன்

காய்ச்சிய பால் – இரண்டு டேபிள் ஸ்பூன்

ஆட்டிஸம் பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம் !

செய்வது எப்படி?
ஆட்டுக்கால் (கஜடா) கேக் செய்வது எப்படி?
இந்த கஜடா செய்வதற்கு முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அவற்றில் 1/2 கப் சர்க்கரை மற்றும் மூன்று ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.
பின் அதனுடன் ஒரு முட்டையை உடைத்து திரும்பவும் ஒரு முறை நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். பின் இன்னொரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளவும்.

அவற்றில் ஒரு கப் மைதா மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் ரவை, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா, உப்பு ஒரு சிட்டிகை, நெய் ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இறுதியாக இந்த மாவை பிசைவதற்கு காய்ச்சிய பாலை சிறிதளவு கலந்து நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும். 

அதாவது கையில் உருண்டை உருட்டும் பதத்திற்கு மாவை பிசைய வேண்டும். இவ்வாறு மாவை பிசைந்த பின்பு மாவை 20 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும். 

20 நிமிடங்கள் நன்கு ஊறிய பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் உருண்டை களை பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்றவும். 
எண்ணெய் நன்கு சூடேறியதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும். பிறகு மாவினை எடுத்து சிறு சிறு உருண்டை களை உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 
அவ்வளவு தங்க சுவையான ஆட்டுக்கால் கேக் என்கின்ற டீக்கடை கஜடா தயார் மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)