சுவையான ஃப்ரூட்ஸ் குச்சி ஐஸ் செய்வது !





சுவையான ஃப்ரூட்ஸ் குச்சி ஐஸ் செய்வது !

0
தேவையான பொருட்கள் :

ஸ்ட்ராபெர்ரி – அரை கப்

கிவி பழம் – கால் கப்

அவுரிநெல்லி (blueberries) – அரை கப்

ராஸ்பெர்ரி (raspberries) – அரை கப்

பச்சை திராட்சை – 2 கப்

செய்முறை :
ஃப்ரூட்ஸ் குச்சி ஐஸ் செய்வது
திராட்சை பழத்திலிருந்து ஜூஸ் எடுத்து கொள்ளவும். அனைத்து பழங்களை யும் மெல்லிய துண்டுக ளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் அனைத்து பழங்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

குச்சி அச்சு டிரேயில் இந்த பழங்களை போட்டு (அனைத்து பழங்களும் சேர்ந்தது போல் போடவும்)

அதன் மேல் பழங்கள் மூழ்கும் அளவில் திராட்சை ஜூஸை ஊற்றவும். நடுவில் குச்சியை வைக்கவும்.

இதை பிரிட்ஜில் பிரீசரில் 3 மணி நேரம் வைத்து செட் ஆனவுடன் எடுக்கவும். குழந்தைகளு க்கு இந்த குச்சி ஐஸ் மிகவும் பிடிக்கும். பழங்களை விரும்பாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடும்.

குறிப்பு :

இந்த பழங்களை தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்கள் விரும்பும், அந்தந்த சீசனில் கிடைக்கும் அனைத்து பழங்களை யும் பயன்படுத்த லாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)