கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?





கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

நன்கு சூடேற்றிய எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு வெடித்தப் பின், கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்குவர். 
கறிவேப்பிலை ஜூஸ் நன்மைகள்
இந்த தாளிப்பை சேர்க்காமல் எந்த ஒரு தென்னிந்திய உணவும் தயாரிக்கப் படுவதில்லை.

கறிவேப்பிலை உணவுகளில் சேர்க்கப் படுவதற்கு அதன் தனித்துவம் வாய்ந்த சுவை மட்டும் காரணம் அல்ல, அதன் மருத்துவ குணங்களும் தான் காரணம்.

கறிவேப்பிலை யின் அறிவியல் பெயர் முர்யா கோயினீகி. அதன் சொந்த ஊர் இந்தியா மற்றும் இலங்கை ஆகும். கறிவேப்பிலை யில் ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவற்றில் கார்போ ஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவை உள்ளன.

வைட்டமின் சி, ஏ, பி மற்றும் ஈ உள்ளிட்ட வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், கிளைக்கோ சைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை இந்த இலைகளில் உள்ளன.

ஆல்கலாய்டுகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்று நோய் வராமல் தடுக்க உதவுகின்றன.

எல்லா உடல் பிரச்சனை களையும் சரி செய்யக் கூடிய ஒரு வீட்டு மருத்துவ பொருள் என்றால் அது கறிவேப்பிலை.
குறிப்பிட்ட பிரச்சனைகள் என்றால் இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனை ஆகிய வற்றை சரி செய்யக் கூடியது.

மற்ற பிரச்சனைகள் என்றால், வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப் போக்கு அவற்றையும் சரி செய்து விடும். 

கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணம் வயிற்றில் எந்த ஒரு நோய் தொற்றுக் களையும் வைத்துக் கொள்ளாது.

இது வயிற்றில் உள்ள பித்தத்தைக் குறைத்து வயிற்றை சுத்தம் செய்து வயிற்று கோளாறுகள் அனைத்தையும் சரி செய்து விடும்.

இப்போது கறிவேப்பிலையைக் கொண்டு எப்படி யெல்லாம் ஜூஸ் செய்து குடிக்கலாம் என்று பார்ப்போம்.
கறிவேப்பிலை ஜூஸ்
ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து

வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

#2 கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

பின் அதை சிறிது மோருடன் சேர்த்து கலந்து பருக வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடிப்பது மிகவும் நல்லது.

#3 ஒரு கப் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, தினமும் பலமுறை குடிக்கலாம்.

#4 40 கிராம் கறிவேப்பிலை பொடி மற்றும் 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டு, அதைத் தொடர்ந்து 1 டம்ளர் வெது வெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.
பின் 10 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிட வேண்டும்.

#5 சிறிது கறிவேப்பிலையை எடுத்து, நீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.
Tags: