பீட்ரூட் இனிப்பு பச்சடி செய்வது எப்படி? | Beetroot Sweet Pachadi Recipe !

0
தேவையானவை:

பீட்ரூட் – கால் கிலோ,

சர்க்கரை – சுவைக்கேற்ப,

முந்திரிப் பருப்பு – 8,

திராட்சை – 12,

ஏலக்காய்தூள் – அரை டீஸ்பூன்,

கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்,

நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:
பீட்ரூட் இனிப்பு பச்சடி செய்வது எப்படி?
பீட்ரூட்டை தோல்நீக்கி துருவிக் கொள்ளுங்கள். நெய்யைக் காய வைத்து,

முந்திரி, திராட்சையை நிறம் மாறாமல் வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

மீதமுள்ள நெய்யில் பீட்ரூட் துருவலை சேர்த்து பத்து நிமிடம் வதக்குங்கள்.

வதக்கிய பின், இறக்கி ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். 

அரைத்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள். அத்துடன் முந்திரி, திராட்சையையும் சேருங்கள்.

நன்கு கொதித்ததும் கார்ன்ஃப்ளாரை அரை கப் தண்ணீரில் கரைத்து சேருங்கள். ஐந்து நிமிடம் கொதித் ததும், ஏலத்தூள் சேர்த்து இறக் குங்கள். 

விருந்து களில் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தரும் இந்த பச்சடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)