ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. 
ருசியான சுண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது.

பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும். சுண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதோடு பல நன்மைகளை கொண்டுள்ளது. 

ஆனால் இதன் கசப்பு தன்மை காரணமாக பலரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இதை இப்படி செய்து கொடுத்து பாருங்கள். 
அனைவரும் விரும்புவார்கள். இதை சாதத்திற்கு தொட்டுக் கொள்ள மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். 

சரி இனி சுண்டைக்காய் கொண்டு ருசியான சுண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?  என்று பார்ப்போம். 
தேவையானவை:

சுண்டைக்காய் - 200 கிராம்

வெங்காயம், தக்காளி - 1

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தேங்காய் - 4 பத்தை

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
ருசியான சுண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
முதலில் சுண்டைக்காய்களை அலசிய பின் அவற்றை மத்து அல்லது உரலில் இரண்டாக பிரியாதவாறு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி இந்த சுண்டக்காய்களை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள். வெந்ததும் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும். தாளித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். சிவந்ததும் தக்காளி சேர்க்க வேண்டும்.

இரண்டும் ஒன்று சேர வெந்ததும் வேக வைத்த சுண்டைக்காயை சேர்த்து பிரட்ட வேண்டும். பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து பிரட்டிக் கொள்ளுங்கள்.

இதற்கு தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே பிரட்ட வேண்டும். எனவே சிறு தீயில் வைத்து பொடி வாசனை போனதும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். 

இப்போது ருசியான சுண்டைக்காய் பொரியல் ரெடி!!! இதை சப்பாத்திக்குக் கூட தொட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு:

வீட்டுக்கு ஒரு சுண்டைச் செடி இருந்தால் போதும்… வற்றல் தயாரித்து வைக்கலாம். பொரியல், கூட்டு, சாம்பார் என்று பல விதமாக தயாரிக்கலாம்.