அரைத்து விட்ட குழம்புத் தூள் செய்வது எப்படி?





அரைத்து விட்ட குழம்புத் தூள் செய்வது எப்படி?

0
பொதுவாக சாம்பாரோ குழம்போ செய்யும் போது நாம் தயாரித்து வைத்துள்ள சாம்பார் மிளகாய்த் தூளை கூட்டி குறைத்து சேர்த்து செய்வது வழக்கம். 
குழம்புத் தூள்

ஆனால் அவ்வப்போது வறுத்து அரைத்து செய்யும் போது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.

நான் ஒரு மாதத்திற்கு தேவை யானதை அரைத்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்வது வழக்கம்.

தேவையான போது இந்த பொடியுடன் தேங்காய் சேர்த்து அரைத்து குழம்பு செய்யலாம். 

இட்லி சாம்பார் செய்யும் போதும் இந்த பொடியை கடைசியாக தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கினால் சுவை தூக்கலாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

7 சிவப்பு மிளகாய்

1/2 கப் மல்லி விதை

1/2 கப் கடலை பருப்பு

1/4 கப் உளுத்தம் பருப்பு

1 Tsp மிளகு

2 Tsp சீரகம்

1 Tsp கருவேப்பிலை பொடி

செய்முறை :

வாணலியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து முதலில் மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும். எடுத்து தட்டில் வைக்கவும்.

பிறகு மல்லியை கை விடாமல் கிளறி விட்டு நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். தட்டில் எடுத்து வைக்கவும். கடலை பருப்பை நன்றாக சிவக்கும் வரை வறுத்தெடுக் கவும். 

உளுத்தம் பருப்பையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கடைசியாக சீரகம் மற்றும் மிளகை சூடேறும் வரை வறுத்தெடுக் கவும்.

நன்றாக ஆறிய பின் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

வறுத்த பருப்பு, மல்லி மற்றும் இதர வாசனை பொருட்கள் அதனுடன் கருவேப்பிலை பொடியை கலந்து ஒரு பாட்டிலில் காற்று புகா வண்ணம் அடைத்து வைக்கவும். 

தேவையான போது ஒரு சுத்தமான காய்ந்த தேக்கரண்டி யால் எடுத்து உபயோகப் படுத்தவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)