பனங்கிழங்கிலிருந்து உணவுப் பொருட்கள் தயாரிக்க !





பனங்கிழங்கிலிருந்து உணவுப் பொருட்கள் தயாரிக்க !

0
பனங்கிழங்கி லிருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் செய்து அசத்தி வரும் தமிழாசிரியர். நாகை மாவட்டம் ஆயக்காரன் புலத்தை சேர்ந்த கார்த்திகேயன் தனியார் பள்ளியில் தமிழாசிரிய ராக பணியாற்றி வருகிறார். 
பனங்கிழங்கிலிருந்து உணவுப் பொருட்ள்
இவர் தற்போது பனங்கிழங்கை கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் செய்து அசத்தி வருகிறார். 

இதில் குறிப்பாக ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கார்த்திகேயனின் பனங்கிழங்கு அல்வா விருந்து நிகழ்ச்சிகளில் ஸ்பெசல் ஸ்வீட்டாக பரிமாறப் படுகிறது.

இது குறித்து அவர் கூறியது:

நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் லட்சக் கணக்கான மரங்கள் அழிந்தன. ஆனால் பனை மரங்கள் மட்டும் ஒன்று கூட சாயவில்லை. 

ஏன் என்றால் பனை மரத்தின் சல்லி வேர்கள் அத்தனை வலிமையானவை. இது குறித்து பொது மக்களிடையே பனை மரத்தை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவது என் நோக்கம் என்றார்.
கடந்த ஆண்டு பனங்கிழங்கு பர்பி செய்தேன் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது பனங்கிழங்கு அல்வா செய்துள்ளேன் இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

மேலும் அடுத்து பனங்கிழங்கு அதிரசம், இனிப்பு முறுக்கு, கார முறுக்கு, பணியாரம், கேசரி, தோசை, என 25 மதிப்பு கூட்டப்பட்ட பனங்கிழங்கு உணவுப் பொருட்கள் செய்து சாதனை படைப்பது தான் என் லட்சியம் என்றார்.

பனங்கிழங்கு பயன்கள்

* உடலை வலுவடையச் செய்கிறது.

* உடல் எடையை குறைக்க பனங்கிழங்கு சிறந்தது.

* சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

* நல்ல பசியை தூண்டும்.
* உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை சுத்தமாக வைக்கிறது.

* மலச்சிக்கல் நோயை குணப்படுத்தும்.

* உடல் ஊட்டத்தை அதிகரிக்கிறது.

பனங்கிழங்கு அல்வா செய்முறை

பனங்கிழங்கை நன்றாக வேக வைத்து, பின் அதனை உலர வைக்க வேண்டும். 

உலர்ந்த பின் அதனை மாவாக்கி, அதில் முந்திரி, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து வெல்லப்பாகு கலந்தால் சுவையான பனங்கிழங்கு அல்வா தயார், என்று பனங்கிழங்கு அல்வா செய்முறையை கூறினார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)