அசத்தலான பிரண்டை இலை துவையல் செய்வது எப்படி?





அசத்தலான பிரண்டை இலை துவையல் செய்வது எப்படி?

0
மனஅழுத்தம் மற்றும் வாய்வு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்து விடும். அப்படிப்பட்ட சூழலில் இதைத் துவையல் செய்து சாப்பிட்டால் செரிமான சக்தியைத் தூண்டி விடும். 
அசத்தலான பிரண்டை இலை துவையல் செய்வது எப்படி?
அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  

அடிக்கடி இந்தத் துவையலைச் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றுக்கும் இது நல்ல மருந்து. 
எலும்பு முறிவு ஏற்பட்டால், இதன் துவையலைச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம். சரி இனி பிரண்டை கொண்டு அசத்தலான பிரண்டை இலை துவையல் செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருட்கள் :

இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு

உளுத்தம் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அசத்தலான பிரண்டை இலை துவையல் செய்வது எப்படி?
பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும். அடுத்து அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.
வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும். அனைத்தும் அரை பட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும். 

சத்தான இஞ்சி பிரண்டை துவையல் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)