வாழைக்காய் மசியல் ரெசிபி | Banana Masala Recipe !





வாழைக்காய் மசியல் ரெசிபி | Banana Masala Recipe !

தோசை, சப்பாத்தி, இட்லி, சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட வாழைக்காய் மசியல் அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
வாழைக்காய் மசியல் ரெசிபி

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2,

காய்ந்த மிளகாய் - 8,

பெரிய வெங்காயம் - ஒன்று,

சின்ன வெங்காயம் - 10,

பூண்டு - ஒரு பல்,

தக்காளி - 2,

புளி - சிறிதளவு,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை, கொத்த மல்லி இலை - சிறிதளவு,

கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

வாழைக் காயை வேக வைத்து, தோலுரித்து, கட்டி யில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், கொத்த மல்லி, தக்காளி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, சோம்பு ஆகிய வற்றை ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து…

நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலா விழுது, மசித்த வாழைக்காய் போட்டு வதக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். ஓரங்கில் எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்த மல்லி இலை தூவி இறக்கவும் சூப்பரான வாழைக்காய் மசியல் ரெடி.
Tags: