ஸ்வீட் பட்டர் கேக் ரெசிபி செய்வது எப்படி?

ஸ்வீட் பட்டர் கேக் ரெசிபி செய்வது எப்படி?

0
பழங்காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப் படுகின்றது. இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும். 
ஸ்வீட் பட்டர் கேக் ரெசிபி செய்வது எப்படி?
பி 12 வைட்டமின்களினால் இரத்தசோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது. இதில் இருக்கும் கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கிறது. 

வயோதிகத்தினால் வரக்கூடிய osteoporosis என்ற எலும்பு வராமல் தடுக்க உதவிகிறது. மேலும் பட்டர் சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. 

சரி இனி பட்டர் பயன்படுத்தி டேஸ்டியான ஸ்வீட் பட்டர் கேக் ரெசிபி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம். 
தேவையானவை . :

மைதா மாவு - 500 கிராம்

சர்க்கரை - 450 கிராம்

பட்டர் - 500 கிராம்

முட்டை - 8

பிளம்ஸ் - சிறிதளவு

வெண்ணிலா - 4 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 4 டீஸ்பூன்

முந்திரிக் கொட்டை - சிறிதளவு 

செய்முறை :
ஸ்வீட் பட்டர் கேக் ரெசிபி செய்வது எப்படி?
முதலில் மிக்ஸ்சியில் சர்க்கரை, முட்டை ஆகிய வற்றை போட்டு கரையும் வரை நன்றாக அடிக்க வேண்டும்.

ஒரு வாணலியில் உருக்கிய பட்டர் அடித்த சர்க்கரை முட்டை கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக கேக் அடிக்கும் பீட்டரினால் இருபது நிமிடங்கள் அடிக்கவும்.

தயாரித்த கலவையுடன் மைதாமவு, பேக்கிங் பவுடர் ஆகிய வற்றை போட்டு கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும். அதனுடன் வனிலா பிளம்ஸ் முந்திரி கொட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும்.

அளவான கேக் தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை பங்கு உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் இருபது நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.
தயாராகிய கேக்கை விரும்பிய வடிவில் வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கி பரிமாறவும். ஸ்வீட் பட்டர் கேக் தயார்.

குறிப்பு
உங்களுக்கு பிடித்தமான கேக் செய்ய முதலில் எப்போதும் மாவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும்.

பிறகு கேக் தேவையான பொருட்கள் கொண்ட உங்கள் பிடித்தமான கேக் வகைகள் செய்து சுவைக்க லாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)