மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி செய்வது எப்படி?





மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி செய்வது எப்படி?

0
அதிகமாக முந்திரியை சாப்பிடும்போது அது உங்களுக்கு ஒவ்வாமை அல்லது மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். அதிக அளவு முந்திரியை சாப்பிடும்போது அது சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். 
மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி செய்வது எப்படி?
மேலும் நாள்பட்ட உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவை அதிக அளவில் ஆக்சலேட்டை கொண்டுள்ளன. 

முந்திரியானது டைரமைன் மற்றும் ஃபைனிலெதிலமைன் என்கிற அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது. 

இந்த அமினோ அமிலங்கள் நமது உடல்களுக்கு சில நன்மைகளை செய்கிறது என்றாலும் சிலருக்கு இதனால் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
முந்திரி, காபி தூள் மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்யப்படும் இந்த சுவை நாவிற்கு நல்ல விருந்தாக இருக்கும். வழக்கமான உணவுகள் சலிப்பை உண்டாக்கும் என்பதால் புதிது புதிதாக செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்

உப்பு சேர்த்த முந்திரி - 3 கப்

பட்டர் - 1/2 கப் 

சாக்லேட் சிப்ஸ் - 1/2 கப் 

காபி துகள்கள் - 2 தேக்கரண்டி 

தண்ணீர் - 2 தேக்கரண்டி 

எப்படி செய்வது
மோச்சா முந்திரி பட்டர் ரெசிபி செய்வது எப்படி?
முந்திரியை மிகவும் மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும். அதில் பாதியளவு வெண்ணெயை சேர்த்து அரைத்து ஒரு பௌலில் எடுத்து வைக்கவும்.

தவாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் சாக்லேட் சிப்ஸ் மற்றும் காபி துகள்களை சேர்த்து கிளரவும்.
ஆரஞ்சு பழங்களின் பயன்கள் !
பின் மீதுமுள்ள வெண்ணெயை சேர்த்து கிளரவும். இவை நன்றாக கலக்கும்வரை அடுப்பை சிம்மில் வைக்கவும்.

இந்த கீரீம் போன்ற கலவையை பௌலில் இருக்கும் முந்திரி கலவை யுடன் சேர்க்க வேண்டும். தேவைக்கேற்ப முந்திரிகளை தூவி, ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)