ஹவாய் பப்பாயா சாலட் ரெசிபி !





ஹவாய் பப்பாயா சாலட் ரெசிபி !

0
பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. 
ஹவாய் பப்பாயா சாலட் ரெசிபி !
உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்க வேண்டுமானால், பப்பாளி பழத்தை உண்ணுங்கள். 

அதில் போலிக் அமிலம் வடிவில் வைட்டமின் பி, வைட்டமின் பி-6 மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. 

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும்.

அதிரோஸ் க்லீரோஸிஸ், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்களுக்கு பப்பாளி சிறந்த தீர்வு. 

ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின் சி, ஏ போன்ற சத்துக்கள் நிறைந்த இந்த சாலட்டை வீட்டிலேயே இப்படி செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்

1 சிறிய பப்பாளி

4 எலுமிச்சை சாறு

3 கப் தர்பூசணி

2 கப் அன்னாசி பழம்

1 கப் தேங்காய், துருவிய

3 கப் வென்னிலா ஃப்ளேவர் யோகர்ட்

எப்படி செய்வது
ஹவாய் பப்பாயா சாலட் ரெசிபி !
பப்பாளியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி கொள்ளவும்.

ஒரு பௌலில் பப்பாளி, தர்பூசணி, அன்னாசி மற்றும் தேங்காய் சேர்த்து கொள்ளவும்.

மற்றொரு பௌலில் யோகர்ட் மற்றும் பப்பாளியின் விதையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்த யோகர்ட்டை பழங்கள் மற்றும் தேங்காயுடன் சேர்க்கவும்.

இந்த சாலட்டை அன்னாசிக்குள் வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)