ட்ரை ஃப்ரூட்ஸ், ப்ராண்டி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவற்றை சேர்த்து செய்யப் படும் இந்த பிளம் கேக்கை இப்படி செய்து பாருங்கள்.
சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

750 gms உலர்ந்த திராட்சை, ப்ளாக் கரண்ட், க்ரான்பெர்ரீஸ், சுல்தானா, ப்ரூன், அத்திப்பழம்

200 மில்லி லிட்டர் ரம்

1 எலுமிச்சை தோல்

1 ஆரஞ்சு தோல்

1/4 தேக்கரண்டி கிராம்பு தூள்

1/2 தேக்கரண்டி இஞ்சி தூள்

1/2 தேக்கரண்டி பட்டை தூள்

50 gms டூட்டி ஃப்ரூட்டி

250 gms வெண்ணெய்

200 gms நாட்டு சர்க்கரை

1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

100 gms பாதாம் பவுடர்

1 தேக்கரண்டி வென்னிலா எசன்ஸ்

4 முட்டை

ஐஸிங் சுகர்

கிறிஸ்துமஸ் டாப்பிங்

தேங்காய் பால் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?

எப்படி செய்வது
சுவையான கிறிஸ்மஸ் பிளம் கேக் செய்வது எப்படி?
மேற்கூறிய எல்லா ட்ரை ஃப்ரூட்ஸையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். கிறிஸ்துமஸ் பிளம் கேக் அத்துடன் ரம் சேர்த்து கொதிக்க விடவும்.

சத்து மாவு பாசி பருப்பு அடை ரெசிபி !

இதனை இரவு முழுவதும் மூடி வைத்து விட்டு பின் இந்த ட்ரை ஃப்ரூட்ஸை எடுத்து ப்ராண்டியில் ஊற வைக்கவும்.

அடுத்த நாள் காலை, மைக்ரோவேவ் அவனை 170 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.

பின் மைதா, பேக்கிங் பவுடர், பாதாம் பவுடர், கிராம்பு, பட்டை தூள் ஆகிய வற்றை சலித்து கொள்ளவும்.

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும். 
மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோலை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதில் அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அத்துடன் சலித்து வைத்துள்ள மாவை சேர்க்கவும். டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதில் ஆரஞ்சு சாறு சேர்த்து கொள்ளவும்.

க்ரீஸ் செய்யப்பட்ட பேனில் இந்த கலவையை ஊற்றி ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் 45 -50 நிமிடங்கள் வரை வைத்து பேக் செய்யவும். 
கேக் நன்கு வெந்தபின் அதன் மேல் ஐஸிங் சுகர் தூவி அலங்கரிக்கவும்.