ருசியான சேமியா வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?

நார்ச்சத்துகள் உள்ளதால் செரிமானம் எளிதாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூட்டு வலியைக் குறைக்கும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. 
ருசியான சேமியா வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?
இரும்புச்சத்து இருப்பதால் ரத்தசோகை நீங்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். மூப்படைதல் தாமதமாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். 
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேமியா வெஜிடபிள் கட்லெட் செய்து கொடுக்கலாம். இந்த டிபனை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மாலை நேர டிபனுக்கு ஏற்றது சேமியா வெஜ் கட்லெட் செய்து பாருங்கள், வித்யாசமான சுவையுடன் ரசித்துச் சாப்பிடுவீர்கள்.
தேவையான பொருட்கள் :

சேமியா – ஒரு கப்

உருளைக் கிழங்கு – 2

கேரட் – 1

பச்சைப் பட்டாணி – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3

இஞ்சி – சிறு துண்டு

புதினா, கொத்த மல்லி – சிறிதளவு

மக்காச் சோள மாவு – 1/2 கப்

கறி மசாலா தூள் – 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்

பிரெட் தூள் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை :
ருசியான சேமியா வெஜிடபிள் கட்லெட் செய்வது எப்படி?
சேமியாவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
சிறிது தண்ணீரில் சோளமாவை போட்டு கரைத்து கொள்ளவும். சேமியாவை 3 கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும். 

உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறிமசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். 

மசாலா சிறிது வதங்கியதும் அதை விரும்பிய வடிவில் கட்லெட்களாக செய்து கொள்ளவும்.
கரைத்து வைத்துள்ள மக்காச்சோள மாவில் கட்லெட்டை நனைத்து பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்க தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாறுவார்கள். 

சூப்பரான சேமியா – வெஜிடபிள் கட்லெட் ரெடி.
Tags: