அசத்தலான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?

அசத்தலான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?

0
சாக்லேட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு சாக்லேட் என்றால் கொள்ள பிரியம். சாக்லேட்டில் அலாதி சுவை உள்ளதால் நாம் அதை சுவைக்க ஆசைப்படுகிறோம். 
அசத்தலான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?
அளவாக சாப்பிட்டால் நன்மைகளும் அளவுக்கு மீறினால் தீமைகளையும் அளிக்கிறது. வயது அதிகரிக்கும் போது நரம்பின் செயல்பாடுகள் குறையும். 

இத்தகைய குறைப்பாடுகள் எளிதில் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது. அது மட்டும் இல்லாமல் புற்றுநோய் பாதிக்கப்படுவதில் இருந்து காக்கின்றது.
சீறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் நன்மை பயக்குகிறது. இரத்த திட்டுகள் ஒன்றுடன் ஒன்று கொத்தாக சேராமல் பாதுகாக்கிறது. இதனால் இரத்த உறைவது தவிர்க்கப் படுகின்றது. 

கொலஸ்ட்ராலை, இரத்த அழுத்தத்தை போன்றவற்றை குறைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வயது முதிர்வை தடுக்கின்றது. 

சாக்லேட்டில் கார்லிக் அமிலம் அதிகமாக இருப்பதால் இதயத்திற்கு வலு சேர்கின்றன. இதனால் இதய நோய் வருவதற்கான பாதிக்குகள் குறையும். 

சரி இனி சாக்லேட் கொண்டு அசத்தலான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?  என்பதை இங்கே பார்ப்போம். 

தேவையானவை :

மைதா - 150 கிராம்

பட்டர் - 200 கிராம்

முட்டை - 200 கிராம் (3 or 4)

சர்க்கரை - 200 கிராம்

கொக்கோ அல்லது ட்ரின்கிங் சாக்லேட் பவுடர் - 50 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஸ்பைசஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப் பட்டால்)

(ஜாதிக்காய், ஏலம், பட்டை மிக்ஸ்)

நட்ஸ் (வால் நட்ஸ், முந்திரி பருப்பு)- 25 கிராம்

ஃப்ரூட்ஸ் - 25 கிராம்

(டூட்டி ஃப்ரூடி, உலர் திராட்சை, ட்ரை மிக்ஸ்ட் ஃப்ரூட்)

பாதாம் எசன்ஸ் - 2 ட்ராப் (விருப்பப் பட்டால்)

ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்

ஒயின் - 2 டீ ஸ்பூன்( விருப்பப் பட்டால்)

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

க்ளிசெரின் - 1 டீஸ்பூன்
செய்முறை :
அசத்தலான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?
மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஸ்பைசஸ், சாக்லேட் பவுடர் எல்லாம் சேர்த்து மும்முறை சலித்து தனியே வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்து வைக்கவும். 

பேக்கிங் ட்ரேயை பட்டர் பேப்பர் போட்டு, எண்ணை தடவி மாவு தூவி தட்டி ரெடி பண்ணிக் கொள்ளவும். நட்ஸ் மிக்ஸியில் பரபர வென்று திரித்து கொள்ளவும்.

ஃப்ரூட்ஸ்சையும், நட்ஸ்சையும் ஒரு டேபிள் ஸ்பூன் மாவில் மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும். பட்டரை பீட்டரால் அடித்து கொண்டு, பொடித்த சர்க்கரையை யும் சேர்த்து அடிக்கவும்.
பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி ! 
(fluffy) முட்டையை யும் பட்டர் சர்க்கரை கலவையுடன் சேர்த்து அடித்து கொள்ளவும், தயிர் சேர்க்கவும், வெனிலா எசன்ஸ், பாதாம் எசன்ஸ் சேர்க்கவும், கிளிசரின் சேர்க்கவும். மிக்ஸ் செய்யவும்.

பின்பு சலித்த மாவை பட்டர், சர்க்கரை, முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சேர்த்து பிரட்டவும் (fold in one direction). 

அடுத்து ஃப்ரூட்ஸ் , நட்ஸ் கலந்த மாவை போட்டு கலந்து கொள்ளவும். இப்பொழுது கேக் மாவு ரெடியாகி விட்டது.

முற்சூடு செய்த ஒவனில் பேக்கிங் ட்ரேயில் கேக் மாவை விட்டு 170 - 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். கேக் நன்றாக ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும். சுவையான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் ரெடி.

குறிப்பு:

நட்ஸ், ஃப்ரூட் சேர்க்காமலும் ப்லைன் சாக்லேட் கேக் செய்யலாம். தயிர், கிளிசரின், எஸன்ஸ், ஸ்பைசஸ் விருப்பப் பட்டால் சேர்க்கலாம். பேக்கிங் க்லாஸில் ட்ரை பண்ணினோம், நன்றாக வந்தது. 
இளம் பெண்ணின் ஆடை உருவப்படும் காணொளி - எத்தனை பேர் பார்த்தீர்கள்?
சாக்லேட், கொக்கோ பவுடர் கூட்டியோ குறைத்தோ அவரவர் டேஸ்ட் தகுந்தபடி உபயோகிக்கவும். ஆனால் மொத்த மாவோடு மிக்ஸ் செய்து சலித்துக் கொள்ள வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)