அருமையான காசி அல்வா செய்வது எப்படி?





அருமையான காசி அல்வா செய்வது எப்படி?

சமையலில் பயன்படும் பூசணிக் காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது. 
அருமையான காசி அல்வா செய்வது எப்படி?
பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை. கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட், ஃபைபர், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் பூசணிக்காயில் நிறைந்துள்ளன. 

இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நம்முடைய உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகின்றன. நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்து கொள்வது தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. 

அந்த வகையில் பூசணிக்காயில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பங்கு வகிக்கும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாக இருக்கின்றன.

பூசணிக்காயில் காணப்படும் பீட்டா கரோட்டின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க உதவுவது மட்டுமல்ல, கண்களை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. 

இது வயது மூப்பு தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (macular degeneration) சிக்கலில் கண்களைப் பாதுகாக்கிறது.

தேவையான பொருள்கள் :

துருவிய வெள்ளைப் பூசணிக்காய் - 1கப்,

சர்க்கரை - 1/2 கப்,

குங்குமப்பூ - சிறிதளவு

ஆரஞ்சு ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை,

நெய் - 1 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய்த் தூள்- 1/2 டீ ஸ்பூன்,

நட்ஸ் (முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ) - ஒவ்வொன்றும் தலா 1 டீ ஸ்பூன்.
செய்முறை :

கடாய் ஒன்றில், வேக வைத்த பூசணி, குங்குமப்பூ, சர்க்கரை, ஃபுட் கலர் அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கலவை நன்கு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 
காசி அல்வா செய்வது
சர்க்கரை முழுவதுமாக உருகி, கலவை கெட்டியான பின், அதில் நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நன்கு கிளறிய பின், கலவையை அடுப்பி லிருந்து இறக்கி விடலாம். 
கலவை, பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்பதால் அதில் கூடுதல் கவனம் தேவை. இறக்கிய பின்னர், அதில் ஏலக்காய்த் தூள், நட்ஸ் ஆகிய வற்றைச் சேர்த்து கடைசியாக ஒரு முறை கிளறினால், சூடான சுவையான காசி அல்வா ரெடி!

குறிப்பு :

வெள்ளைப் பூசணிக் காயின் விதைகள் மற்றும் தோலை நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும். துருவிய பூசணிக்காயை ஐந்து நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வேக வைத்துக் கொள்ளவும். 
மைக்ரோவேவ் இல்லாதவர்கள் பூசணித் துருவலை 7 - 8 நிமிடங் களுக்கு ஆவியில் வைத்தெடுக்க லாம் அல்லது குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கலாம். 

முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை ஆகிய வற்றை நெய்யில் லேசாக வறுத்து கொள்ளவும்.
Tags: