மசாலா இட்லி செய்வது | Spicy Idli Recipe !

0
தேவையான பொருட்கள்:

ஒரு கப் நறுக்கிய தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

பெரிய வெங்காயம் - 2

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

கடுகு

கடலை பருப்பு

மஞ்சள் தூள் - அரை டேபிள் ஸ்பூன்

இட்லி - 5

கொத்த மல்லி - தேவையான அளவு

உப்பு - சுவைக்கு

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :
மசாலா இட்லி செய்வது

தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். இட்லியை சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து பிறகு அரை ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு அந்தக் கலவையை சிறிது நேரம் நன்கு வேக வைக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய இட்லி துண்டுகளை சேர்த்து இட்லி துண்டுகள் அந்த மசாலா கலவையில் சேரும் வரை கவனமாக உடையாமல் கிளறி விடவும். கடைசியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். சூடான சுவையான மசாலா இட்லி ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)