வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி?

வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி?

0
வெள்ளை சோளத்தில், நிறைய நார்ச்சத்து உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்து, எடை அதிகம் ஏறி விடாமல் பாதுகாக்கிறது.. 
வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி?
நீரழிவு நோய் உள்ளவர்கள், கம்பு மாவுடன், சோளமாவையும் கலந்து களி போல செய்து சாப்பிடலாம்.. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் சோளம் முக்கிய பங்கு வகிகிறது. 

வெள்ளை சோளத்தில் 48 சதவீதம் நார் சத்து இருப்பதால், இது சிறந்த கொழுப்பு கரைப்பானாக செயல்படுகிறது. 

வெள்ளை சோளத்தில் கால்சியம், வைட்டமின் B, இரும்புச் சத்து, புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் என பல்வேறு சத்துக்கள் உள்ளன.. இவையெல்லாம் சேர்ந்துதான் நமக்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குகின்றன.

இதில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள், எலும்பை உறுதி படுத்துகின்றன. செரிமான மண்டலத்தை தூண்டி, உணவின் சத்துக்களை உடல் கிரகிக்க வைப்பதால், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. 

செரிமானத்தை அதிகரித்து, கொழுப்புகளை கரைத்து, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்தி, கால்சியம், இரும்பு சத்து, புரதம் ஆகியவற்றை அள்ளி தரும் அருமருந்தாம். 

வெள்ளை சோளத்தில், வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

துபாயில் உலகின் மிக ஆழமான கின்னஸ் சாதனை படைத்த நீச்சல் குளம் ! 

தேவையானவை: 

வெள்ளைச் சோள மாவு - 200 கிராம் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்),

மைதா மாவு - 2 டீஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு,

வெங்காயம் - ஒன்று,

உப்பு - சிறிதளவு,

எண்ணெய் - 50 கிராம்.

செய்முறை:

வெள்ளை சோள மாவு ரொட்டி செய்வது எப்படி?

வெள்ளைச் சோள மாவு. மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லித்தழை, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் ஆகிய வற்றை சேர்த்து, சிறிது சுடு நீர் தெளித்து ரொட்டி (சப்பாத்தி) மாவு மாதிரி பிசையவும்.

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?
கையில் எண்ணெய் தடவி சாத்துக்குடி அளவு மாவு எடுத்து உருட்டவும். இதை எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து ரொட்டியாக தட்டவும்.

தோசைக் கல்லை சூடாக்கி, ரொட்டியைப் போட்டு, எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும். இதைச் சூடாக சாப்பிட வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)