கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச் செய்வது | Wheat Bread - Paneer Sandwich Recipe !





கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச் செய்வது | Wheat Bread - Paneer Sandwich Recipe !

0
தேவையானவை : 

கோதுமை பிரெட் – 6, 

பனீர் துருவல் – கால் கப், 

தக்காளி – 2 (வட்டமாக வெட்டியது), 

வெங்காயத் தாள் (நறுக்கியது), கேரட் துருவல் – தலா 2 டேபிள் ஸ்பூன், 

இஞ்சி - பூண்டு பேஸ்ட், 

நெய், எண்ணெய், உப்பு, வெண்ணெய் – சிறிதளவு, 

மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன். 

செய்முறை :
கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச் செய்வது
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், இஞ்சி - பூண்டு பேஸ்ட்டை வதக்கி, வெங்காயத் தாள், கேரட், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி, பனீர் துருவல் போட்டுக் கிளறி இறக்க வேண்டும். 

தவாவில் சிறிது நெய் விட்டு, பிரெட்டை இருபுறமும் டோஸ்ட் செய்ய வேண்டும். பிரெட் நடுவில் வெண்ணெயைத் தடவி, பனீர் மசாலா, தக்காளி வைத்து, பரிமாறவும். 
(பிரெட் டோஸ்டர் இருந்தால், அதிலேயே சாண்ட்விச் செய்து கொள்ளலாம்). 

குறிப்பு :

சரிவிகித ஊட்ட சத்துக்கள் நிறைந்தது. எளிதில் தயாரிக்க ஏற்றது. அனைவரும் சாப்பிடலாம். பனீர், வெண்ணெய் சேர்ப்பதால், உடலுக்கு நல்ல கொழுப்பு அதிகம் கிடைக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)