தேவையானவை: 

புதினா – ஒரு கப், 

கொத்தமல்லி – சிறிதளவு, 

பச்சை மிளகாய் – ஒன்று, 

எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், 

சீஸ் – 2 ஸ்லைஸ், 

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், 

வெள்ளரிக்காய் துண்டு- 2, 

பிரெட் – 4 ஸ்லைஸ், 

உப்பு – சிறிதளவு.  

செய்முறை: 
புதினா சீஸ் சாண்ட்விச் செய்வது

புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லா வற்றையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். உப்பு ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். 
ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய், சிறிதளவு புதினா விழுதை தடவி, சீஸ் ஒரு ஸ்லைஸ் வைத்து அதற்கு மேல் வெள்ளரிக்காய் துண்டு, இன்னொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து, டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.

இதே போல மற்ற பிரெட் ஸ்லைஸ் களையும் செய்து கொள்ளவும்