கேபேஜ் பனீர் ரோல்ஸ் செய்வது | Making Cabbage Paneer Rolls Recipe !





கேபேஜ் பனீர் ரோல்ஸ் செய்வது | Making Cabbage Paneer Rolls Recipe !

0
தேவையானவை: 

துருவிய கேபேஜ் (கோஸ்) – ஒரு கப், 

உருளை கிழங்கு – ஒன்று (வேக வைத்து மசிக்கவும்), 

பனீர் (துருவியது) – அரை கப், 

கொத்த மல்லி இலை – சிறிதளவு, 

இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், 

பிரெட் தூள் – கால் கப், 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 
கேபேஜ் பனீர் ரோல்ஸ் செய்வது
ஒரு பாத்திரத்தில் துருவிய கேபேஜ், மசித்த உருளை கிழங்கு, துருவிய பனீர், கொத்த மல்லி, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகிய வற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். 

கலவையில் சிறிதளவு எடுத்து நீளவாட்டில் உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். 
குறிப்பு: 

இதற்கு டொமேடோ சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)