ருசியான வெல்ல இட்லி செய்வது எப்படி?





ருசியான வெல்ல இட்லி செய்வது எப்படி?

0
வெல்லத்தில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், சோடியம், எனர்ஜி, சர்க்கரை போன்ற சத்துக்கள் இருப்பதால், பல பிரச்சனைகளில் இருந்து காத்து ஆரோக்கியத்தை வழங்கும். 
ருசியான வெல்ல இட்லி செய்வது எப்படி?
வெல்லம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையை தவிர்க்கலாம். வெல்லத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இரவில் வெல்லம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது சருமத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். 

உண்மையில், வெல்லத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் தன்மை சருமத்தில் உள்ள மாசுக்களை அகற்றுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் வைக்கிறது. 

இரவு தூங்கும் முன் பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக வரும். இது தவிர, காலையில் எழும் போது மிகவும் உற்சாகமாக உணரலாம்.

தேவையானவை: 

இட்லி மாவு – 2 கப், 

பொடித்த வெல்லம் – ஒரு கப், 

தேங்காய் துருவல் – முக்கால் கப், 

பாசிப்பருப்பு – அரை கப், 

ஏலக்காய்த் தூள் – ஒரு சிட்டிகை. 

செய்முறை: 

சிறிதளவு தண்ணீரில் வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி கொஞ்சம் கொதிக்க விடவும் (பாகு வரக்கூடாது). பிறகு இட்லி மாவை நன்றாக மென்மையான இட்லி சுடும் பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

பின்னர் தேவையான அளவு இட்லி மாவை எடுத்துக் கொண்டு மாவில் சேர்க்கவும். பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, மாவுடன் கலந்து ஏலக்காய்த் தூள் சேர்த்து கொள்ளவும். 

இட்லித் தட்டில் மாவை விட்டு, அதன் மீது தேங்காய் துருவலை தூவி வேக வைத்து எடுக்கவும். குழந்தைகளின் மனதைக் கவரும் இட்லி இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)