தேவையானவை: 

கேப்பை (கேழ்வரகு) மாவு 100 கிராம், 

வெல்லம் 200 கிராம், 

நெய் 50 கிராம், 

எண்ணெய் 50 மில்லி, 

ஏலக்காய்த் தூள் சிறிதளவு, 

வறுத்த வேர்க்கடலை ஒரு டீஸ்பூன். 

செய்முறை: 
கேப்பை வெல்ல அல்வா செய்வது
கேப்பை மாவை நீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். 

கடாயை அடுப்பில் ஏற்றி வெல்லக் கரைசலை சேர்த்து கொதி வருகையில் கரைத்த கேப்பை மாவை ஊற்றவும். 

கலவை கெட்டியாகும் போது நெய், எண்ணெய் சேர்த்துக் கிளறி, பளபளவென மாவு வெந்து, கடாயில் ஒட்டாத பதத்துக்கு வரும் போது ஏலக்காய்த் தூள், வறுத்த வேர்க்கடலை சேர்த்து இறக்கவும். இதை அப்படியே பரிமாறலாம். வில்லை களாக்கியும் சாப்பிடலாம்.