இடித்த இஞ்சி ரசம் செய்வது | Ginger Soup Recipe !

இடித்த இஞ்சி ரசம் செய்வது | Ginger Soup Recipe !

0
தேவையானவை: 

நாட்டுத் தக்காளி - 2, 

இஞ்சி - ஒரு துண்டு, 

பருப்பு நீர் - 2 கப் (50 கிராம் துவரம் பருப்பை வேக விட்டு, தண்ணீர் விட்டு கரைக்கவும்), 

மஞ்சள் தூள், புளி சிறிதளவு, பூண்டு - 2 பல், 

சீரகம் - அரை டீஸ்பூன், 

மிளகு - ஒரு டீஸ்பூன், 

பெருங்காயம் - ஒரு சிறுகட்டி (தூளாக்கவும்), 

கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு, 

நெய் - ஒரு டீஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு. 

செய்முறை: 

தக்காளியை நறுக்கவும். இஞ்சியை இடித்துக் கொள்ளவும். பூண்டு, சீரகம், மிளகு ஆகிய வற்றை அம்மி (அ) உரலில் நசுக்கிக் கொள்ளவும் (மிக்ஸியிலும் பொடிக்கலாம்). 
மண்சட்டி அல்லது வாணலியில் நெய்யை சூடாக்கி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும். நறுக்கிய தக்காளி, இடித்த இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து, வதங்கியபின் புளி, உப்பு, பருப்பு நீர் சேர்க்கவும். 

நசுக்கிய பூண்டு சீரகம் மிளகு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்த மல்லித் தழை, கறிவேப்பிலை தூவி இறக்கி சூடாக பரிமாறவும். இது இருமலைத் தணிக்க உதவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)