புரதசத்து நிறைந்த இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்வது எப்படி?

புரதசத்து நிறைந்த இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்வது எப்படி?

0
இளைஞர்கள் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறியிருக்கிறது பனீர். அசைவத்தை காட்டிலும் பன்னீரில் புரதசத்து அதிகம் உள்ளது. 
இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்வது
அவ்வளவு நல்லது உடம்புக்கு. இட்லிக்கு சாம்பார், சட்னி என செய்து போரடித்தது போதும். 
வட இந்திய சுவையில் இட்லி பனீர் மசாலா ஃப்ரை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை: 

இட்லி – 4, 

பனீர் – ஒரு கப், 

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் – தலா ஒன்று, 

இட்லி மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன், 

கொத்த மல்லி – சிறிதளவு, 

நல்லெண்ணெய் – அரை கப், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 
இட்லியை சதுரமாக ‘கட்’ செய்து வைக்கவும். பனீரையும் அதே போல் செய்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். 

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு முதலில் வெங்காய த்தை வதக்கி, பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக சுருள வதக்கவும். 
கடாயில் எண்ணெய் விட்டு பனீரை வறுத்து எடுக்கவும். இட்லியையும் ஃப்ரை செய்யவும். 

பிறகு இரண்டையும் சேர்த்து… உப்பு, வெங்காயம் – தக்காளி கலவை, இட்லி மிளகாய்ப் பொடி சேர்த்து நன்றாக கிளறி, கொத்த மல்லி சேர்த்து இறக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)