சத்து நிறைந்த கீரை ஆம்லெட் செய்வது | Amelite Made of Nutrient Spinach !





சத்து நிறைந்த கீரை ஆம்லெட் செய்வது | Amelite Made of Nutrient Spinach !

0
தேவையான பொருட்கள் : 

ஏதாவது ஒரு கீரை - ஒரு கப்

நாட்டு முட்டை - 3

வெங்காயம் - ஒன்று

ப.மிளகாய் - 2

மிளகு தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
சத்து நிறைந்த கீரை ஆம்லெட் செய்வது
> ப.மிளகாய், வெங்காய த்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும். 

கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும். ப.மிளகாய், வெங்காய த்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் சுத்தம் செய்த கீரை, உப்பு சேர்த்து வதக்கவும்.

கீரை பாதியளவு வெந்ததும் இறக்கி முட்டை கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும். வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, சுவையான கீரை ஆம்லெட் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)