சோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி?





சோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி?

0
சைவ உணவுப் பிரியர்களே உங்களுக்கு  புரதச்சத்து அதிகம் கிடைக்க சோயா சிறந்த உணவு பொருளாகவும். அதிக புரோட்டின் இருப்பதால், சிக்கன் போன்ற அசைவ உணவு உண்பவர்களுக்கு இது சிறந்த மாற்றாக விளங்குகிறது. 
சோயா மொச்சை கிரேவி
சோயா துண்டில் கோழியின் மார்பகத்தில் உள்ள புரதத்திற்கு சமமான அளவு புரதம் இருப்பதாக கூறப்படுகிறது. அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாற நினைப்பவர்களுக்கும் சோயா சிறப்பான மாற்று உணவாகும்.  

சோயாவில் புரதம் மட்டுமின்று, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
சோயா துண்டுகளில் இருக்கும் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கெட்ட உங்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. 

எனவே, சோயா உங்கள் இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நார்ச்சத்து அதிகம் உள்ள சோயா, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கச் செய்கிறது. 

இதனால்,  அடிக்கடி சாப்பிடும் ஆர்வம் குறைவதால், உடல் எடையைக் குறைக்க சோயா உதவியாக இருக்கிறது. 

சரி இனி சோயா மொச்சை பயன்படுத்தி டேஸ்டியான சோயா மொச்சை கிரேவி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  
தேவையானவை:

சோயா – 100 கிராம்,

மொச்சை – 100 கிராம்,

தக்காளி – 2,

மிளகாய் வற்றல் – 2,

தனியா – ஒரு டீஸ்பூன்,

இஞ்சி – சிறிய துண்டு,

பூண்டு – 2 பல்,

தயிர் – 2 டீஸ்பூன்,

சின்ன வெங்காயம் – 2,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
சோயா, மொச்சையைக் குக்கரில் வைத்து, தண்ணீர் விட்டு, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும் தக்காளி, மிளகாய் வற்றல், தனியா, இஞ்சி, பூண்டு பல், சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறி, நன்கு வதங்கியதும் வேக வைத்த மொச்சை, சோயாவைப் போட்டுக் கொதிக்க வைத்து, தயிர் விட்டு இறக்கவும்.
குறிப்பு:

சோயா மொச்சை யுடன் இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் வாயுத்தொல்லை வராது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)