பிரட் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி?





பிரட் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி?

0
கோதுமை உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் நன்மை செய்யகூடியது என்று கோதுமை உணவுகளை அதிகம் சேர்ப்பவர்களுக்கு இந்த பிரவுன் பிரட் அறிமுகம் தேவையில்லை. 
பிரட் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி?
முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த பிரட் சத்தான உணவாக கருதப்படுகிறது. முழு கோதுமை மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு வகை ரொட்டி பிரவுன் பிரட். 

வெள்ளை பிரட் மற்றும் பழுப்பு பிரட் இவை இரண்டுக்கும் இடையில் முக்கிய வேறுபாடு பயன்படுத்தப்படும் மாவு வகைகளில் உள்ளது. பழுப்பு ரொட்டி முழு கோதுமை மாவில் தயாரிக்கப் படுகிறது. 
அதனால் இதில் ஊட்டச்சத்துக்களும் நார்ச்சத்துக்களும் மிகுதியாக உள்ளன. வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப் படுகிறது என்பதால் முழு தானியத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் இல்லை. 

சில கோதுமை ரொட்டிகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரையிலிருந்து கூடுதல் கார்போ ஹைட்ரேட்டுகள் இருக்கலாம். அதனால் வாங்கும் போது அதில் சேர்க்கப் பட்டிருக்கும் பொருளின் பட்டியலை சரி பார்க்க வேண்டும். 

அதே போன்று முழு கோதுமை ரொட்டியில் எண்ணெய் சேர்க்கப்பட்டால் தவிர மற்றவற்றில் கொழுப்புகள் இருக்காது. இதையும் சரிபார்க்க வேண்டும்.இதில் தாவர அடிப்படையிலான புரதத்தில் அதிகமாக உள்ளது. 

முழு கோதுமை ரொட்டியில் ஒரு துண்டில் 5 கிராம் புரதம் உள்ளது. இதில் வைட்டமின்களும் தாதுக்களும் வலுவூட்டல் மூலம் உற்பத்தியாளர்கள் எதை சேர்க்கிறார்கள் என்பதை பொறுத்து மாறுபடலாம். 
எனினும் இவற்றில் மேற்கண்ட இரும்பு, பொட்டாசியம் வைட்டமின்கள் பி, தயாமின், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் ஃபோலேட் ஆகியவை சிறிய அளவில் உள்ளன.  
வாய் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?
இந்த செய்முறையில் உப்பு இருந்தால் ரொட்டியில் சோடியம் இருக்கலாம். ஒரு துண்டு கோதுமை ரொட்டி 80 கலோரிகளை அளிக்கிறது. சரி இனி சுவையான பிரட் சீஸ் ரோல்ஸ் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பிரட் - 4 ஸ்லைஸ்,

சீஸ் துண்டுகள் - 4,

மிளகுத் தூள், வெண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை :
பிரெட் சீஸ் ரோல்ஸ்
பிரெட்டின் ஓரங்களை வெட்டி, அப்பளக் குழவியால் மெலிதாக தேய்த்து, கொள்ளவும். தேய்த்த ஒரு பிரெட் துண்டை எடுத்து அதில் சீஸ் துண்டு களை மேல் வைத்து மிளகுத்தூள் தூவவும்.

பிறகு, இறுக்கமாக ரோல் செய்யவும். இவ்வாறு அனைத்தை யும் செய்ய கொள்ளவும். 
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி, சூடானதும் ரோல்களைப் போட்டு எல்லா பக்கமும் பொன் நிறமாக ஆனதும் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும். 

குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் ரோல்ஸ் மிகவும் பிடிக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)