குறைவான கொலஸ்ட்ரால் உடைய காடை வறுவல் செய்வது எப்படி?

0
காடை முட்டையில் வைட்டமின்களும், இதர சத்துக்களும், கோழி முட்டையை விட அதிகம் உள்ளது. அதுவும் கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது. 
குறைவான கொலஸ்ட்ரால் உடைய காடை வறுவல் செய்வது எப்படி?
கோழி முட்டையில் 50% வைட்டமின் பி1 என்றால், காடையில் 140% உள்ளது என்றால் பாருங்கள்.

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை உட்கொண்டு வந்தால், ஒவ்வாமை பிரச்சனை அல்லது அலர்ஜி தடுக்கப்படும். 
ஏனெனில் இதில் ஓவோமுகாய்டு புரோட்டீன் உள்ளது. இது அலர்ஜியை எதிர்த்துப் போராடும். 

மேலும் காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் உயிர்ச்சத்துப் பயனும் (micro nutrients) உள்ளது. சரி இனி காடை வறுவல் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
காடை - 4

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலாத் தூள் - 2 ஸ்பூன்

தயிர் - 2 ஸ்பூன்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

எண்ணெய் - பொரிக்க

உப்பு - தேவையான அளவு
செய்முறை :
குறைவான கொலஸ்ட்ரால் உடைய காடை வறுவல் செய்வது எப்படி?

காடையை சுத்தம் செய்து 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு

அதனுடன் எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். 
ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும். சுவையான காடை வறுவல் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)