சுவையான வாத்துக்கறிக் குழம்பு செய்வது எப்படி?





சுவையான வாத்துக்கறிக் குழம்பு செய்வது எப்படி?

வாத்து இறைச்சியின் கொழுப்பில் உள்ள பாஸ்போலிபிட் என்ற வேதிப்பொருள், குறிப்பிடத்தக்க இறைச்சி வாசம் வருவதற்குக் காரணமாக அமைகிறது. 
வாத்துக்கறிக் குழம்பு  செய்வது
வாத்து இறைச்சியில் இரும்புச் சத்தும், ஹீம் எனப்படும் வண்ண ஊக்கியும் அதிகளவில் உள்ளதால் இவ்வகை இறைச்சி மற்ற கோழி இறைச்சியை காட்டிலும் வண்ணம் மிகுந்ததாகக் காணப்படுகிறது.
கோழி இறைச்சியைப் போலவே, வாத்து இறைச்சியிலும் பன்செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளதால், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற இறைச்சியாக கருதப்படுகிறது.

வாத்து இறைச்சியின் தன்மை, வாத்து இனத்தை மற்றும் தீவனத்தை மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டாக வெள்ளை பெகின் வாத்து இறைச்சி மஸ்கோவி இனத்தைக் காட்டிலும் அதிகக் கொழுப்பு நிறைந்த இறைச்சியாகும்.

வாத்து மிகவும் கொழுப்பு தன்மை நிறைந்தது. அதனை தோலுடன் தான் சமைக்கணும். அப்போ தான் நல்லா யிருக்கும். சமைக்கும் போது எண்ணெய் குறைவாக பயன்படுத்தவும்.
தேவையான பொருட்கள் :

வாத்துக்கறி - 1/2 கிலோ

வெங்காயம் - 1

பூண்டு - 10 பற்கள்

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

கொத்த மல்லி - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது 

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், கொத்த மல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாத்துக் கறியை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, அத்துடன் வாத்துக் கறியை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். 
பிறகு அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். கறியானது நன்கு வெந்து, கிரேவி போன்று சற்று கெட்டியானதும்,

அதில் கொத்த மல்லியைத் தூவி இறக்கினால், வாத்துக்கறி குழம்பு ரெடி. தோசைக்கு அருமையாக இருக்கும் வாத்துக் கறிக்குழம்பு.
Tags: