நன்மை தரும் வெள்ளை நிற உணவுகள் !

நன்மை தரும் வெள்ளை நிற உணவுகள் !

பூண்டு : ரத்த அழுத்தம் உடல் பருமன் உடையோர், புற்று நோயாளிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு. கிருமிகள், வைரஸ், நுண்ணு யிரிகள் போன்ற வற்றால் ஏற்படும் பாதிப்பி லிருந்து காக்கும்.
பூண்டு

சுவாசப் பிரச்னை களைத் தீர்க்க உதவும். தாய்ப்பால் சுரக்க உதவும். சர்க்கரை நோயாளிகள் தினமும் உண்ணலாம்.

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திரு க்கும், கணை யத்துக்கு நன்மைகளைச் செய்யும். பூண்டு சாப்பிட்டால் துர்நாற்றம் வீசும் என்று, பூண்டை ஒதுக்கக் கூடாது.
நம் உடலுக்கு தேவையான அறுவகைச் சுவைகள் !
பெருங்குடல், ப்ராஸ்டேட், நுரையீரல், மார்பகம், மலக்குடல் புற்று நோய்கள் வராமல் தடுக்கும். கொழுப்பைக் கரைத்து, இதய நோய்கள் வராமல் காக்கும்.

காளான் : 

அசைவத்தில் உள்ள சுவையும், சத்துக்களும் காளானில் கிடைப்பதால், அசைவ உணவு சாப்பிடாத வர்கள் எடுத்துக் கொள்ளலாம். தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட், அமினோ அமிலங்கள், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
காளான்

ஹார்மோன்கள் சுரப்பதற்கும், நரம்பு மண்டலத்து க்கும், பாண்டோதினிக் (Pantothenic acid) என்ற அமிலம் உதவுகிறது. 

சிவப்பு ரத்த அணுக்களை ஆரோக்கி யமாக்க ரிபோ ஃபிளேவின் உதவுகிறது. இதில் உள்ள செலினியம் (Selenium), உடலில் உள்ள செல்களு க்குக் கவசம்.
இதய கட்டிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை !
வைட்டமின் டி இருப்பதால், எலும்புகள் வலுப்பெறும். கொழுப்பு இல்லை. கலோரிகளும் இதில் மிகக் குறைவு தான். இரண்டு நாட்களு க்குள் பயன்படுத்தி விடுவது நல்லது.

தேங்காய் : 
தேங்காய்

உடனடி ஆற்றலைக் கொடுக்கும் மிகச் சிறந்த உணவு. வைட்டமின்கள், தாதுக்கள், கலோரிகள், நார்ச் சத்துக்கள், அமினோ அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன.

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். தேங்காயில் நல்ல கொழுப்பு அதிகம். ஆதலால் கொழுப்பு என்று தேங்காயைத் தவிர்க்க வேண்டாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரல் தொற்று களிலிருந்து சருமத்தைக் காக்கும்.
இந்த உணவுகளை நீரில் ஊற வைத்து சாப்பிடணுமாம்.. படிச்சு பாருங்க !
தேங்காய், இளநீரில் உள்ள தாதுக்கள், உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து புத்துணர்வைத் தருகின்றன.
Tags: