வெஜிடேஸ் என்ற வார்த்தையில் இருந்து தான் காய்கறிகளை வெஜிடேபிள் என்று அழைக்கிறோம். 
கோதுமை ரவை காய்கறிப் பொங்கல் செய்வது எப்படி?
நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னாள் பச்சையாக உண்ணலாம். 

காய்கறிகளில் தான் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக அடங்கியுள்ளது. 
ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுங்கள். 

அப்படி செய்வதால் இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
என்னென்ன தேவை?

சம்பா கோதுமை ரவை - 1 கப்,

நறுக்கிய பீன்ஸ், கேரட், குடை மிளகாய், பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு - தலா 1/4 கப்,

உப்பு - தேவைக்கு, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

கறிவேப்பிலை - 1 கைப்பிடி,

பொடித்த பச்சை மிளகாய் - 3,

கரகரப்பாக பொடித்த மிளகு, சீரகம் - தலா 1 டேபிள் ஸ்பூன்,

முந்திரி - 20,

பொடித்த இஞ்சி - 2 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய மல்லித் தழை - தேவைக்கு,

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2.

சத்துமிக்க காலிஃப்ளவர் கீர் செய்வது எப்படி?

எப்படிச் செய்வது?
கோதுமை ரவை காய்கறிப் பொங்கல் செய்வது எப்படி?
சம்பா கோதுமை ரவையை சுத்தம் செய்து குக்கரில் போட்டு, 3 மடங்கு தண்ணீர் ஊற்றி, 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். 

பாசிப் பருப்பையும் கழுவி தேவையான தண்ணீர் விட்டு பதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகு, சீரகம், முந்திரி தாளித்து பட்டை, 

கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய காய்களையும் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

இதில் வெந்த கோதுமை ரவை, பாசிப் பருப்பு கலவையை கொட்டி நன்கு கிளறி பரிமாறும் முன்பு நெய், வறுத்த முந்திரி, கொத்த மல்லித் தழையால் அலங்கரித்து பரிமாறவும்.