அல்வாவை பிடிப்பிக்கா தவர்கள் யாரும் இருக்க மாட்டோம். ஆல்வா என்றாலே ஆர்வத்தோடும் ஓடி வரும் குழந்தைகளை பார்த்தாலே தெரிந்து விடும் அல்வாவின் மகிமை. அல்வாவில் பல வகை உள்ளது. அதில் நாம் இப்பொது பால் அல்வா செய்வது எப்படி என்று பாப்போம்.
பளபளக்கும் பால் அல்வா - Milk Halwa
தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்

சர்க்கரை - 2 கப்

முந்திரி - 6

ஏலக்காய் - 2

நெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

முந்திரியை உடைத்து கொள்ள வேண்டும். ஏலக்காய் வாயில் தட்டுப் படாமல் இருப்பதற்கு சர்க்கரை ஏலக்காய் விதையுடன் சேர்த்து நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு சண்ட காயும் வரை கிளற வேண்டும். பின் சிறிய பேனில் நெய் ஊற்றி முந்திரியை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

பால் ஓரளவு திறந்ததும் சர்க்கரை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து சண்ட காய்ச்ச வேண்டும். 

பாலானது கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொது அடுப்பை அனைத்து நன்கு கிளறி விடும் போது இன்னும் கெட்டியான பதத்திற்கு வரும். இப்பொது நமக்கு தேவையான சுவையான பால் அல்வா ரெடி.