தேவையானவை
பேரீச்சை - 100 கிராம்,

கர்ஜூர் - 8 (விதை நீக்கியது)

நெய் - 100 கிராம்,

சர்க்கரை - 250 கிராம்,

எண்ணெய் - 50 மில்லி,

டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,

முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,

வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்

செய்முறை :
டிரை ஃப்ரூட் அல்வா
முதலில் பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊற வைத்து, மறு நாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். 

நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). 

அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும் போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.