சத்துமிக்க காளான் கிரேவி செய்வது எப்படி? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

சத்துமிக்க காளான் கிரேவி செய்வது எப்படி?

காளானில் பல்வேறு தாதுக்கள் உள்ளன. செலீனியம், பொட்டசியம், தாமிரம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் காளானில் காணப்படுகிறது. 
சத்துமிக்க காளான் கிரேவி செய்வது எப்படி?
 
இவை பொதுவாக தாவர உணவுகளில் கிடைப்பதில்லை. ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழிகள் என்று வரும் போது காளான் ஒரு சக்திமிக்க ஆதாரமாக விளங்குகிறது

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

அரைப்பதற்கு...
வெங்காயம் - 1

தக்காளி - 2

பட்டை - 1 இன்ச்

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 1

கிராம்பு - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 2 சிட்டிகை

செய்முறை:

காளானை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, 

அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைப்பதற்கு கொடுத் துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும். 

தக்காளி யானது நன்கு மென்மையாக வதங்கியதும், அதனை இறக்கி ஆற வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் காளானை சேர்த்து வதக்க வேண்டும். 

பிறகு அதில் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 

நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கி, கொத்த மல்லியைத் தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான காளான் கிரேவி ரெடி!

குறிப்பு : 

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.